cinema

img

நகரத்தைச் சுத்தப்படுத்துபவர்களின் வாழ்க்கை எப்போது சுகமாகும்?

ஹேமாவதி

பூர்வகுடிகளை ஆக்கிரமிப்பாளர் கள் என்று அகற்றி பல மைல் தொலைவுக்கு அப்பால் துரத்தி அடித்தா லும் அதிகாலையிலேயே கிளம்பி வந்து இந்த நகரத்தைச் சுத்தம் செய்து, நாங்க... இல்லை என்றால் இந்த நகரமே நாறி போய்விடும் என்ற எதார்த்த உண்மையைச் சொல்லும் திரைப்படம்தான் விட்னஸ். முதன்முறையாக முழுக்க முழுக்க  துப்புரவுத் தொழிலாளரின் போராட்டத் துயரத்தையும், நீங்காத வலியையும் கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். அடுக்குமாடி குடியிருப்பில் கழிவு நீர்த் தொட்டியை சுத்தப்படுத்தும்போது விஷவாயு தாக்கி இறந்த மாணவனின் தாய் நடத்தும் சமூக பாதுகாப்பு போராட்டமே இந்தப்படம்.  கணவர் மற்றும் மகனை மலக் கழிவில் பறி கொடுத்துவிட்டுப் போராடும் ஒரு துப்புரவு தொழிலாளிதான் தோழர் ரோகிணி.  எதார்த்த நடிப்பில் வாழ்ந்து காட்டி யுள்ளார்.  மழை, புயல், கொரோனா என எந்தப்  பேரிடர் காலத்திலும் பணியில் இருப்பவர்கள் தான் துப்புரவுத் தொழிலாளி. கொரோனா காலத்தில், தொழிலாளி ஒருவருக்கு லிப்ட் கொடுக்க நேர்ந்தது. அப்போது அவர், நாங்க வந்துபோக முறையான வண்டிகூட இல்ல. பால் வண்டியிலதான் ஏறி வந்தேன். வீட்டருகே வேலை இருந்தால் எந்த பிரச்சனையும் இல்ல. பல மைல் தூரத்திலி லிருந்து வந்துபோக வேண்டியுள்ளது. இதுல பயோ மெட்ரிக் முறைவேற. குறித்த நேரத் தில் கட்டை விரலை வைக்கவில்லை என் றால் நம்மபாட்டுக்கு வேலை செய்வோம் கணக்கில் வராது. விடுமுறையாகிவிடும் என்று கூறினார். ஏகலைவன் காலத்துக் கட்டை விரல் இன்னும் இவர்களை விட்ட பாடில்லை. மேலும் அவர், ஒரு காலத்தில் குப்பை வண்டியை மாடு இழுத்தது. இப்ப மாட்டுக்கு பதில் குப்பை வண்டிய நாங்க தள்ளுறோம். அப்ப மாடும் நாங்களும் ஒன்னுதானே... ஊருக்கே நோய் வராமல் பாதுகாப்புப் பணியில் இருக்கும் எங்கள் வாழ்க்கைக்கு எந்தவிதப் பாதுகாப்பும் இல்லை என்று ஏக்கத்தோடு கூறினார்.  

இந்த இடத்தில் தமுஎகச மாநிலச் செய லாளர் தோழர் ஆதவன் தீட்சண்யா எழுதிய காக்கா தேசம் என்று சிறுகதை நினைவுக்கு வருகிறது. அக்கதையில் ஒரு துப்புரவுப் பணியாளருக்கு அந்நாட்டின் ஜனாதிபதியை விட உயர்பதவி, அதிக சம்பளம், ராஜ மரியாதையான பணி. எனவே துப்புரவுத் தொழிலாளர் பணிக்காக பல உயர் அதிகாரி கள் விண்ணப்பித்து, அப்பணிக்காக காத்துக்கிடப்பதுபோல இந்தக்கதை இருக்கும். இவர்களின் அவலநிலையைப் பார்க்கும்போது இந்த கதை நிஜமானால் என்ன என்று தோன்றுகிறது.  விண்வெளிக்குச் செயற்கைக் கோள் அனுப்புகிறோம். ஆனால் இன்னமும் செப்டிங் டேங்கைச் சுத்தப்படுத்த மனிதர் கள் குழிக்குள் இறங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ‘கழிவுநீர்த் தொட்டியில் மனிதர்கள் இறங்கக்கூடாது என்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு.  இயந்திரங்களைப் பயன்படுத்தினால் அதிக செலவு என்று அப்பாவி ஏழைத் தொழிலாளர்களை இறக்கி மலக்கழிவு களை எடுக்கும் வேலை செய்ய வலியுறுத்து வது என்பது மக்களின் பொது புத்தியில் ஊறிப்போயிருக்கு. நம்ம வீட்டுக் குப்பை யையும் நம்ம வீட்டு மலக்கழிவையும் காசு, வருமானம் இல்லை என்பதற்காக ஒரு ஏழைத் தொழிலாளி செய்கிறார் என்றால் அவரை ஏளனமாகப் பார்ப்பதா?  தனது உழைப்பால் ஊரைக் காப்பாற்று பவர்களைக் கடவுளாகப் பார்க்க வேண்டும். ஆனால், மனிதர்களாகக் கூட பார்க்க மறுக்கும் நிலையே இந்தியாவில் உள்ளது. தற்போது காண்ட்ராக்ட் முறையே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பணி இடங்களில் இறந்தால் நிரந்தரப் பணியாளர் இல்லை என்று கூறி இவர்களின் இறப்பிற்கு இழப்பீடு என்பதே அரிதாகிவிடுகிறது.

போராட்டம் நடத்தினால் மட்டுமே ஏதேனும் சிறிய தொகை நிவாரணமாகக் கிடைக்கிறது.  இந்தப் படத்தில் உழைக்கும் மக்க ளுக்குப் பாதிப்பு என்றால் முன் வருபவர் கள் இடதுசாரிகள் கம்யூனிஸ்டுகள் என்று காண்பித்து, எதார்த்தத்தைப் பதிவு செய்துள்ளார் இயக்குநர். அதிலும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய சென்னை மாவட்டச் செயலாளரும் மாநிலக்குழு உறுப்பினருமான G.Selva நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.  ஆய்வுகள் இல்லை, ஆதாரம் இல்லை, உண்மைத்தன்மை இல்லை என்றாலும் நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு வழங்கப் படும் நாட்டில், என்னதான் ஆதாரங்கள், சாட்சிகள் கொடுத்தாலும் எளிய மக்களுக் கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சிறு பான்மை மக்களுக்கும் எதிராகத் தான் தீர்ப்பு என்பது காலம் காலமாக நடக்கும் செயலே, என்பதைத் தொடர்ந்து உணர்த்தும் படம்தான் விட்னஸ்.  இந்தப் படத்தை புகைப்படக் கலைஞ ரான தீபக்கின் இயக்கி, ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் இன்று வெளி யாகிவுள்ளது. வருமானத்திற்காக சமரசம் செய்து எடுக்கப்படும் படத்திற்கு மத்தியில் சமரசம் இல்லாமல் சமூகத்தில் நிலவும் முக்கிய பிரச்சனையைக் கையில் எடுத்துள்ள இயக்குநருக்குப் பாராட்டுகள்.  சமூகப் பிரச்சனைகளை மக்கள் மத்தி யில் கொண்டு வந்து அவர்களின் மனசாட்சி யைக் கேள்வி எழுப்ப வேண்டும் என்றால், இதுபோன்ற படங்களை வெற்றி பெறச் செய்வது நம் அனைவரின் கடமையாகும்.

;